2025 மே 07, புதன்கிழமை

மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Gavitha   / 2015 ஜூலை 24 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரலங்கட்டு பிரதேசத்தில் நீண்டகாலமாக நடாத்தி வரப்பட்ட சட்ட விரோத மதுபான உற்பத்தி நிலையம் நேற்று வியாழக்கிழமை (23)  முந்தல் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது.

முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, சட்ட விரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கோடா பெரல் ஆறும் சட்ட விரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளினை நடாத்தி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X