Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூலை 26 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
இந்தத் தேர்தலில் எமக்கு போட்டியாக எதிர்க்கட்சியொன்று கிடையாது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் புத்தளம் பிரதேசத்திலிருந்து முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல முடியாவிட்டால் இனி எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது என வடமேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.எச்.எம்.நவவி கூறினார்.
புத்தளம் தில்லையடியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் எமது மாவட்டத்தில் பிரதான கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகள் கடுமையாக போட்டியிடும். ஆனால் தற்போது புத்தளத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் என்று எமக்கு சவாலாக எவரும் கிடையாது என்பது எமது வெற்றிக்குரிய அறிகுறிகளாகும்.
இம்முறை சுதந்திரக்கட்சி சார்பில் புத்தளத்திலிருந்து ஒரு பிரதேச சபை உறுப்பிராக இருந்த ஒருவரையே வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார்கள்.
புத்தளம் மாவட்டத்தில் சு.க வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரை தவிர, மற்றை அனைவரும் புத்தளத்துக்கு வெளியே உள்ளவர்கள்.
அந்தளவுக்கு அந்த கட்சி வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆக, எமக்கு சு.க ஒரு சவாலாக இருக்கப் போவதில்லை. எனவே, எமக்கு எதிர்க்கட்சியொன்று புத்தளத்தில் இல்லை. மற்றும் இந்த தேர்தலில் புதிதாக புத்தளத்தில் ஒரு கூட்டணி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறது. எனவே அதுவும் எமக்கு ஒரு பிரச்சினையில்லை.
அந்த சுயேட்சைக்குழுவான கூட்டணி ஆகக்குறைந்தது மூவாயிரம் அல்லது நாளாயிரம் வாக்குகளை மட்டும்தான் எடுக்கப் போகிறது. எனவே, அவர்களால் வெற்றி பெற முடியாது.
கடந்த மாகாண சபையில் எமது மாவட்டம் சார்பில் ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள் காணப்பட்டார்கள். ஆனால் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மு.கா சார்பில் ஒருவரும், சு.க. சார்பில் போனஸ் ஆசனத்தில் ஒருவருமாக இருவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தும் ஒற்றுமையின்மையால் தமக்குரிய பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த பல வருடங்களாக எமது வாக்குகள் புத்தளம் பிரதேசத்தை விட்டு வெளிப்பிரதேசத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
இதனால் அபிவிருத்தி உள்ளிட்ட சகல விடயங்களிலும் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். என்ன தேவைகள் இருந்தாலும்; இன்னொரு பிரதேசத்திற்கு சென்று பெற வேண்டிய துர்பாக்கிய நிலை எமது மக்களுக்கு காணப்படுகிறது.
இந்த தேர்தலில் ஐ.தே.க ஆட்சியில் கூட எமது மாவட்டத்திலிருந்து ஒரு பிரதிநிதியை நாடாளுமன்றம் அனுப்பி வைக்காவிட்டால் இனி, எந்த காலத்திலும் எமது மாவட்டத்திலிருந்து முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, நாங்கள் இந்த தேர்தலில் வெற்றிபெற்ற சமூகமாக இருக்கப் போகிறோமா அல்லது தொடர்ந்தும் தோற்றுப் போன சமூகமாக தொடர்ந்தும் எமது தலையில் நாங்களே மண்ணை அள்ளிப் போடுகின்ற சமூகமாக இருக்கப் போகிறோமா என்பதை சிந்தித்துப் பாருங்கள் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
45 minute ago
1 hours ago