2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சட்டவிரோதமான முறையில் ஆஸி. செல்ல முயன்றவர் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 30 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சி செய்த நபரொருவர் பேருவளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

சந்தேகநபர், பேருவளை துறைமுகத்துக்கு அருகில் நேற்று புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், மட்டக்களப்பு பிதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் இவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X