2025 மே 07, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; சிறுமி உட்பட மூவர் காயம்

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ், முஹம்மது முஸப்பிர்

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டுப் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற காரும் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதியே உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்தில் 5 வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்து சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பாரவூர்தியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X