2025 மே 07, புதன்கிழமை

ஆப்தீன் எஹியா ஐ.தே.கவில் இணைவு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர், முஹம்மது சனூன்

எதிர்வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் சுயேட்சைக் குழு சார்பாக போட்டியிடும் அபேட்சகரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆப்தீன் எஹியா நேற்று திங்கட்கிழமை(03) ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

நேற்றுக் காலை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதோடு, நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக  தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக  வடமேல் மாகாண சபைத் தேர்தலில் இரு முறை போட்டியிட்டு ஆப்தீன் எஹியா வெற்றி பெற்றிருந்தார்.

இறுதியாக நடைபெற்ற வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தில் இணைந்து ஒட்டகச் சின்னத்தில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட இருந்தார்.

சுயேட்சைக் குழுவில் 11ஆம் இலக்கத்தில் போட்டியிடும் அவர், பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

சுயேட்சைக் குழுவின் மூலம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. தேசியக் கட்சிகளைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட்டுவிட்டு தோல்வியடைந்த பின்னர் நாம் யாரிடம் சென்று எமது தேவைகளைச் செய்து கொள்வது? இந்த தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி பெரும் வெற்றியீட்டி ஆட்சி அமைக்க இருக்கின்ற இந்த நேரத்தில் அந்த வெற்றியில் பங்காளர்களாக இணைந்து கொள்வதே புத்திசாலித்தனமாக செயல் என்பதை உணர்ந்து கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X