2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மூவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜெயசிங்க

வேட்பாளர் இல்லாது சட்டவிரோதமான முறையில் சுவரொட்டிகளைக் கொண்டு சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட வேட்பாளரான நியோமல் பெரேராவின் ஆதரவாளர்கள் எனவும் இவர்களிடமிருந்து சுமார் 400 சுவரொட்டிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை (05) இரவு குறித்த வேட்பாளர் போட்டியிடும் எண் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளுடன் வானில் செல்கின்றார்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கருவலகஸ் மஹகொன்வௌ பிரதேசத்தில் வைத்து, கருவலகஸ் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதவான் முன்ணிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X