Thipaan / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 553,009 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளிலிருந்தே இவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதன் பிரகாரம் புத்தளம் தொகுதியில் 125, 702 பேரும், ஆனமடு தொகுதியிலிருந்து 112, 978 பேரும், சிலாபம் தொகுதியிலிருந்து 118, 171 பேரும், நாத்தாண்டிய தொகுதியிலிருந்து 89, 975 பேரும், வென்னப்புவ தொகுதியிலிருந்து 106, 183 பேரும் இவ்வாறு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 10,253 பேர் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் நான்கு வாக்கெண்ணும் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, புத்தளம் ஸெய்னப் முஸ்லிம் மகளிர் ஆரம்ப பாடசாலை, புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி என்பவற்றிலேயே இம்முறை வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இதுவரை காலமும் வாக்கெண்ணும் நிலையமாகச் செயற்பட்டு வந்த புத்தளம் சென் அன்றூஸ் சிங்கள மகா வித்தியாலயம் இம்முறை
க. பொ. த. உயர் தரப் பரீட்சை நிலையமாக உள்ளதால் அங்கு இம்முறை வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவில்லை.
புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் இடம்பெயர்ந்த வன்னி மாவட்ட மக்களுக்காக விஷேட கொத்தனி வாக்களிப்பு நிலையங்களும் அம்மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள், 12 சுயேட்சைக் குழுக்களையும் சேர்ந்த 264 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களிலிருந்து எட்டுப் பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago