2025 மே 07, புதன்கிழமை

ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலுத்வத்த, மெல்லவ பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானை சாரதி பின் நோக்கிச் செலுத்தியதில் மோதுண்டு ஐந்து வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என கொடதெனியாவ பொலிஸார் தெரிவித்தனர்.   

புதன்கிழமை (12) பிற்பகல் 2.45 மணியளவில்; இடம்பெற்ற இச்சம்பத்தில் ஏமாரா எவந்தி எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார் என கொடதெனியாவ பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தின் போது காயங்களுக்கு உள்ளான சிறுமி, நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும் சடலம், பிரேத பரிசோதனையின் பொருட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொடதெனியாவ பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வானின் சாரதியை கைது செய்துள்ள கொடதெனியாவ பொலிஸார், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X