2025 மே 07, புதன்கிழமை

'மஹிந்தவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எதிராக 7,000 முறைப்பாடுகள் உள்ளன'

Thipaan   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எதிராக அரசாங்கத்துக்கு 7,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றின் விசாரனைகளினை இடைநிறுத்தவே மஹிந்த எம்.பி யாக வர முயற்சிக்கின்றார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.

புத்தளம் நகரில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களினை ஆதரித்து புதன்கிழமை(12) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஒருவர் தற்காலிக ஊழியராக பாடசாலைக்கு மீண்டும் வருவது போல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாடாளுமன்ற உறுப்பினராக வர முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X