Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
வில்பத்து சரணாலத்தில் இருந்து ரூபாய் 4 இலட்சம் பொறுமதியான தேக்கு மரக்குற்றிகளை வெட்டிக் கடத்திய மூவரை புத்தளம் குற்றப்புலனாய்வு பிரிவினர், இன்று வியாழக்கிழமை (13) கைது செய்துள்ளனர்.
அனுமதிப்பத்திரம் பெறாமல் சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திய இவர்களை கைது செய்ததுடன், கடத்தலுக்காக இவர்கள் பயன்படுத்திய வான் மற்றும் மோட்டார்சைக்கிள்களையும் புத்தளம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வானத்தவில்லுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் வில்பத்து சரணாலத்திலுள்ள தேக்கு மரங்களை திருட்டுதனமாக வெட்டி, கல்பிடிய பகுதியில் சுற்றி இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு வீட்டுக்குத் தேவையான கதவு மற்றும் ஜன்னல்கள் அமைப்பதற்கு விற்பனை செய்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரையும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago
57 minute ago