Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் - பாதெனியா பிரதான வீதியில் தம்புத்தேகம விவசாயிகள் திணைக்களத்துக்கு முன்னால் வைத்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியொன்று ரக்டரை முந்த முனைந்த போது மறுமுனையில் வந்த கெப் ரக வாகனத்தில் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை (14) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் லுனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சமந்தி மங்கலிகா என்பவரே பலியாகியுள்ளார்.
சடலம், அநுராதபுரம் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026