2025 மே 21, புதன்கிழமை

2500 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

எழுவன்குளம் பிரதேசத்தின் கலாஓயாவிலிருந்து நீர் எடுக்கப்பட்டு அது சுத்திகரிக்கப்பட்டு 24 மணித்தயாளமும் புத்தளம் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கக்கூடிய வகையில் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 2500 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக நிர்மாண வேலைகள் நடைப்பெற்று வருகின்றன.

இத்திட்டம் நிறைவடைந்ததும் புத்தளம் மக்களின் முக்கிய பிரச்சினையாகவுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என புத்தளம் தொகுதி சுதந்திர கட்சி அமைப்பாளரும், புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X