2025 மே 22, வியாழக்கிழமை

3 மாதங்களுக்குள் பள்ளிவாசலை அகற்ற வேண்டும்: ஆர்ப்பாட்டக்காரர்கள்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மல்வத்துஓயா லேன் பள்ளிவாசலை 3 மாதங்களுக்குள் அகற்றுமாறும் இல்லாதுபோனால் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அவகாசம் வழங்கியுள்ளனர்.

அநுராதபுரம் மல்வத்துஓயா லேன் பள்ளிவாசலை உடனடியாகத் அகற்றுமாறு கோரி பௌத்த பிக்குகளினால் நேற்று சனிக்கிழமை  அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் அமைந்துள்ள லேன் வீதி மூடப்பட்டதோடு பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். சுமார் 150 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, சம்ப இடத்திற்கு அநுராதபுரம் கிழக்கு நுவரகம் பிரதேச செயலாளர் அழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.  3 மாதங்களுக்குள் இதற்கு ஒரு தீர்வு தரப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில், 3 மாதங்களுக்குள் பள்ளிவாசல் அகற்றப்படாது போனால் மீண்டும் நாம் வருவோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துச் சென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • Irshathmnm Monday, 07 January 2013 01:38 AM

    பாராளுமன்றத்தில் முஸ்லீம்களின் ஆதரவு தேவைப்படும் போதெல்லாம் அரசு நடத்தும் கபட நாடகமே இது. இதனால்தான் இன்று நாட்டில் இயற்கையின் சீற்றம் காணப்படுகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X