2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

சிறந்த பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு இருமாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் பீ. முஹம்மட் பஷீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திறன் அபிவிருத்தி, தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம். தாஹிர், எஸ்.எச்.எம். நியாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த பாடசாலைக் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக 70 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .