Niroshini / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - நாகவில் - எருக்கலம்பிட்டி கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மத்திய மருந்தகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச தலைவரும் ஆசிரியருமான ஏ.ரியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசிம், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், வடமாகாண சபை உறுப்பினர் ஹபீப் முஹம்மது ரயீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த மத்திய மருந்தகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சுகாதார அமைச்சு 18 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யவுள்ளதுடன், முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 minute ago
16 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
30 minute ago
1 hours ago