2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அதிபருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம், சேர்விஸ் வீதியில் அமைந்துள்ள அநாகரிக தர்மபால ஆரம்பப் பாடசாலை அதிபர் தர்ம விக்கிரமவுக்கு அரசியல் பிரமுகர் ஒருவரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்து பாடசாலை மாணவர்களின் பெற்றார்கள், புத்தளம் கல்வி பணிமனைக்கு முன்பாக இன்று புதன்கிழமை (24) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசியல்வாதியினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக குறித்த அதிபர், அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் பாடசாலைக்கு சமூகமளிக்காததால் பாடசாலையின் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

எனவே, கல்வி அதிகாரிகள் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, அதிபருக்கு நியாயம் பெற்றுத்தருமாறும் அவரை மீண்டும் பாடசாலை நடவடிக்கைகளுக்குத் திருப்புமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X