Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மே 29 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
வடமேல் மாகாண அமைச்சுக்களின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் - 2024 செவ்வாய்க்கிழமை (28) வடமேல் மாகாண ஆளுனரின் அலுவலகத்தில், ஆளுனர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
வடமேல் மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக நலனோம்புகை, நன்னடத்தை மற்றும் சிறுவர் விவகாரம், மகளிர் விவகாரம் மற்றும் சபை அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான விவகாரங்கள் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டன.
வடமேல் மாகாணத்தில் உள்ள போதனா வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகள், பிரதேச சுகாதார பணிமனைகள் உள்ளிட்ட சுகாதாரம், சுதேச வைத்தியசாலைகளில் நிலவும் ஆட்பற்றாக்குறை, மாகாண நன்னடத்தை திணைக்களத்தின் சிறுவர் தங்குமிடங்களில் உள்ள குறைபாடுகள், மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கான தங்குமிட வசதிகள் மேம்படுத்தல், அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் நேரடி பங்களிப்பைப்பெற்றுக் கொள்ளல், மற்றும் சமூக நலனோம்புகைத் திணைக்களத்தின் ஊடான பொதுமக்கள் நலனோம்புகை செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago