Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புத்தளம், ஆரச்சிகட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேடையில் இன்று (27) ஏறினார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு கடந்த மே மாதம் 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட இடத்தில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மக்கள் பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, முன்னாள் அமைச்சர்களான காமினி லோகுகே, நாமல் ராஜபக்ஷ , பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, சம்பத் அத்துகோரள மற்றும் பலருடன் அமைச்சர் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்ற அமைச்சர், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுடன் கலந்துரையாடிவிட்டு, பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொழும்பு புறப்பட்டுச் சென்றார்
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்ததால், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த தருணத்தில் ஆதரவு தெரிவிப்பது யானை மீது சவாரி செய்வதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சூழலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேடையில் ஏறியதற்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பொது மக்கள் பேரணியை ஏற்பாடு செய்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
6 minute ago
4 hours ago
27 Aug 2025
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago
27 Aug 2025
27 Aug 2025