முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 04 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாக்கப்பட வேண்டிய கடல் ஆமையை அறுத்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் பிரதிவாதிகளான கடற்றொழிலாளர்கள் இருவருக்கும், சிலாபம் மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய ஹேசான் த. மெல், 60,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
சிலாபம், வெல்ல கடற்றொழில் கிராமத்தின் குறுசபாடு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த இரு பிரதிவாதிகளும், கடற்றொழில் சட்டத்தை மீறி, ஆழ்கடலில் பிடிக்கப்பட்ட ஆமையை இறைச்சியாக்கி, அதன் 35 கிலோகிராம் இறைச்சி மற்றும் பாகங்களைத் தம்வசம் வைத்திருந்த போது, சிலாபம் மோசடி ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்விருவரும், தமது தவறை ஒப்புக் கொண்டதையடுத்து, ஒவ்வொருக்கும் தலா 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago