Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 02 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மிக முக்கிய ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழு மூச்சுடன் தயாராக உள்ளார். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாவத்தகம முவன்ந்த சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு விழாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மேலும் தெரிவித்ததாவது,
'தீர்வற்ற முறையிலே கொடுக்கல் - வாங்கல் முறை, ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டங்கள் எனப் பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அரசியல் இலாபத்துக்காக இதன் நன்மை, தீமை அறியாமல் சிலர் எதிர்க்கின்றனர். இந்த நல்ல காரியத்தைப் பிரதமர் தெடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
இதை எவ்வகையிலும் எதிர்க்கத் தேவையில்லை. இந்தியாவின் உதவிகள் சேவை அடிப்படையிலான உதவிகளாகத் தான் கிடைக்கவுள்ளன. இந்தியர்கள், எம்மவர்களை விட அதிகமாக அங்கு சாம்பாதிக்கின்றார்கள். தகவல் தொழில்நுட்பத்தில் அவர்கள் தான் முன்னணியில் உள்ளனர். அவர்களுடைய சேவை எங்கள் நாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும்.
இதேவேளை, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கணிசமான உதவிகளைச் செய்து வருகின்றது என்பதை நாங்கள் மறந்து விட முடியாது' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
17 minute ago
17 minute ago