Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளைப் புத்தளம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தோறும் தோற்றுவித்து, அவற்றின் மூலமாக அப்பகுதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
அதற்கான முன்னாயத்தப்பணிகள், நேற்று சனிக்கிழமை (06), இரவு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி தலைமையில், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆப்தீன் எஹியாவின் இல்லத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வழிகாட்டலில் மதுரங்குளி, புழுதிவயல், கொத்தாந்தீவு மற்றும் உடப்பு போன்ற பிரதேசங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளைத் தோற்றுவித்து பிரதேசக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இளைஞர் அமைப்பினைத் தோற்றுவிப்பதன் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்புகளில் புதிதாக இணைந்து கொள்பவர்களுக்கான விண்ணப்பங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
31 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
56 minute ago
1 hours ago