2025 மே 06, செவ்வாய்க்கிழமை

உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

Niroshini   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் - கல்பிட்டி - கன்டல்குடா அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கான உபகரணங்களை வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம்  பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த உபகரணங்களை பாடசாலை அதிபரிடம்  உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (05) காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர் எம்.எச்.எம். கலீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கன்டல் குடா  அமைப்பாளர் எம்.பசீர், முஸ்லிம் காங்கிரஸின் முசல்பிட்டி  அமைப்பாளர் ஹஸன் மொஹிதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X