2025 மே 06, செவ்வாய்க்கிழமை

எல்லைகள் நிர்ணயம் இன்மையால் வில்பத்து சுருங்குகிறது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

வில்பத்து சரணாலயத்துக்குள் அமைந்துள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான பொம்பரிப்பு, பல்லக்கண்டல், அந்தோனியார் தேவாயலத்தின் எல்லைப் பகுதிகள் உரிய முறையில் நிர்ணயிக்கப்படாமையினால் அப்பகுதியில் வில்பத்துக் காடானது அழிக்கப்பட்டு வருவதாக வரையறுக்கப்பட்ட சுற்றாடல் ஸ்தாபனம் குற்றஞ்சாட்டியுள்ளது.  

கொழும்பில் உள்ள டச்சுப் பறங்கியர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ருக்ஷான் ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,  

வில்பத்து தேசிய ரீதியில் அடையாளப்படுத்தப்பட்ட உயிர்ப்பல்வகைமையைக் கொண்ட ஒரு பகுதியாக உள்ளது. குறித்த தேவாலயத்தின் வருடாந்த, மாதாந்த, வார உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.  அதனையொட்டி மெல்லியதான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் ஜன நடமாட்டமில்லாது காணப்பட்ட பகுதியில் மக்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது. இது அப்பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்கான உணவு மற்றும் அதன் நடமாட்டத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடாகும்.

பொம்பரிப்பு பிரதேசமானது வில்பத்து பகுதியில் காணப்படுகின்ற சமவெளிப் புற்தரையாக இனங்காணப்பட்டுள்ளது. இந்த அந்தோனியார் தேவாலயத்தை மையமாக வைத்துக் கொண்டு 10 ஏக்கர் காணி சுரையாடப்பட்டுள்ளது.  ஒரு நாளைக்கு சுமார் 60-70 யானைகள் நடமாடும் இப்பகுதியில் தற்போது யானைகளின் நடமாட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

இதற்கு அரச அதிகாரிகளும் துணைபோகின்றனர். அரசியல்வாதிகளின் செல்வாக்கும் செலுத்தப்படுகின்றது. வனஜீவராசிகளை அழித்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு வழிபாட்டையும் எந்த ஒரு மதமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது மதச்சுதந்திரம் என்னும் பெயரில் நாட்டிலுள்ள வனங்கள், பூங்காக்கள் சூரையாடப்படுகின்ற செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X