2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், தில்லையடி, ஆனபுள்ள ஊத்து, அருள் மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார் ஆலயத்தின், புனருத்தாபன மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள், எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.22 தொடக்கம்  10.50 வரை நடைபெறவுள்ளது.

மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு கர்மாரம்ப நிகழ்வுகள் 19 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.15  க்கும், எண்ணெய் காப்பு நிகழ்வுகள் 20 ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையும் இடம்பெறவுள்ளது.

பிரதிஷ்டா நிகழ்வுகளை புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் நடாத்தி வைக்கவுள்ளார். இவருடன் வவுனியா சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள், கொழும்பு சிவஸ்ரீ வெங்கட சுப்ரமணிய குருக்கள், கொட்டகலை சிவஸ்ரீ குமார விக்னேஸ்வர குருக்கள், கண்டி பிரம்ம ஸ்ரீ பத்ம ராகவ சர்மா, புத்தளம் பிரம்ம ஸ்ரீ சுந்தர கவிசான் சர்மா மற்றும் பிரம்ம ஸ்ரீ. ச. ஹரிஹர சர்மா ஆகியோரும் சமய கிரியைகளை நடாத்தி வைக்கவுள்ளனர்.

மஹா கும்பாபிஷேக உபயத்தைப் புத்தளம் எம். சிவலிங்கம் ஐயப்ப குருசாமி, திருமதி கமலேஸ்வரி ஐயப்ப குருசாமி தம்பதிகள் வழங்கவுள்ளனர். மஹா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெறுவதற்கு அருளாசியினை, இந்தியா பிள்ளையார் பட்டி வேத ஆகம அதிபர் விகாஸ்ரத்னா டொக்டர் கே. பிச்சை குருக்கள் வழங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X