2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஒளிப்படப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கொழும்பில் இயங்கிவரும் இளம் நட்சத்திர அறக்கட்டளையின் ஏற்பாட்டில், தேசிய ரீதியில் நடைபெற்ற ஒளிப்படப் போட்டியில், புத்தளம் புழுதிவயல் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.என்.எம்.பர்ஹான், முதலாமிடத்துக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழி அமைச்சர் மனோ கணேசன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

புத்தளம் புழுதிவயல் பிரதேசத்தில், ஸ்டூடியோ ஒன்றின் உரிமையாளரான எம்.என்.எம்.பர்ஹான், வீடியோ, படப்பிடிப்பு, எடிட்டிங் மற்றும் குறுந்திரைப்படம் இயக்கம் என்பனவற்றிலும் அதிக பங்களிப்புச் செய்துவருகின்றார்.

இதேவேளை கடந்த வருடம், வடமேல் மாகாண அரச கலை விழாவில் ஒளிப்படப் போட்டியில் எம்.என்.எம்.பர்ஹான், வர்ணப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X