Niroshini / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
புத்தளத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பாக அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபர், ஐந்து மாதங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளாதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நிகவெரட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி புத்தளம் நகர எல்லைப்பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் நேரடியாகத் தொடர்புடையவர் எனவும் இவர் இதுவரை காலமும் தலைமறைவாகியிருந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேக நபர், கொட்டஹேனா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை(10) புத்தளம் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago