2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கசிப்பு காய்ச்சிய நால்வர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரிங்கர ஜயசிங்க

முந்தல், நவத்தன்குளம் விஹேனகமப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்புக் காய்ச்சிய நால்வரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் கோழிப் பண்ணை வைத்துள்ளதாகக் கூறியே கசிப்புக் காய்ச்சும் இடத்தை நடத்திவந்துள்ளமை தெரிவந்துள்ளது.

இவர்களிடமிருந்து, 1,000 கசிப்புப் போத்தல்கள், 108,000 கோடா மற்றும் கசிப்புக் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்திய உகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும், 50 பெரல்கள், 50 கிலோகிராம் சீனி மற்றும் இரண்டு லொறிகள் ஆகியனவும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X