Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
புத்தளம்-மாதம்பே பகுதியில் வைத்தியசாலைக்கு அருகில் கனரக வாகனம் ஒன்று வீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம், நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கனரக வாகனம் மின்கம்பத்தில் மோதுண்டதையடுத்து, மின் கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மாதம்பே பழைய நகர் ஊடான போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மேற்படி வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், மாதம்பே பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago