2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கற்றறிந்த பிக்குகளின் வழிகாட்டல் அவசியம்: ஜனாதிபதி

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை கல்வி ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்கின்றபோது கற்றறிந்த பிக்குகளின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கத்துக்கு அவசியமானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அநுராதபுரம் பிக்கு விசேட கல்லூரியின் புதிய நான்குமாடி நூல்நிலையக் கட்டடத்தை, திங்கட்கிழமை (22) பிற்பகல் திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 

நாடெங்கிலுமுள்ள எல்லா விகாரைகளிலும் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவுசெய்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவாதகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கிராமப்புற பௌத்த விகாரைகளிலுள்ள பிக்குகளைப் போன்று ஏனைய சமயத் தலைவர்களையும் பலப்படுத்தி சிறந்ததோர் சமூகத்தை நாட்டில் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X