Editorial / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அநுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டட தொகுதியை, நேற்றுத் திறந்து வைத்து உரையாற்றும் போதே,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி, அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர், ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு ஒருபோதும் சம்பளத்துக்கு என மட்டுப்பட்டதல்ல என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, பிள்ளைகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நினைவு பலகையை திரைநீக்கம் செய்து ஜனாதிபதி, கட்டடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்கி, கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.
அழகியல் துறையில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற 3 மாணவர்களுக்கு, ஜனாதிபதி பரிசில் வழங்கினார்.
அதிபர் டி.ரணசிங்கவால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க, முதலமைச்சர் பேஷல ஜயரத்ன உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அத்துடன், ஜனாதிபதி இதற்கு முன்னர் அநுராதபுரத்துக்கு விஜயம் செய்திருந்தபோது, அநுராதபுரம் நிவந்தகச்சிய வித்தியாலய 12ஆம் ஆண்டு மாணவியான ஏ.டி.டி.சத்சரணி விடுத்த கோரிக்கைக்கமைய, அந்த பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக 28 இருக்கைகளைக் கொண்ட பேரூந்தை குறித்த மாணவியிடம், ஜனாதிபதி அன்பளிப்புச் செய்தார்.
அதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பிள்ளைகள் உலகை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கம் உயர் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
31 minute ago
42 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
42 minute ago
49 minute ago
1 hours ago