2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கல்வி மறுமலர்ச்சிக்கு புதிய யுக்திகள்

Princiya Dixci   / 2016 மார்ச் 02 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

நாட்டில் தற்போது கல்வி மறுமலர்ச்சி பற்றிப் பேசப்படுகின்றது. இதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் கட்டாயக் கல்வி அவசியம் போன்ற புதிய யுக்தியைக் கையாண்டு இருக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாவத்தகம முவன்ந்த சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு விழா, அதிபர் எஸ். மைக்கல் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது, 

'ஒரு மாணவன் பாடசாலையை விட்டு வெளியேறும் போது ஏதாவது ஒரு துறையில் சிறந்த விளங்குதல் வேண்டும். திறன் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் எந்தத் துறையிலே திறனுடன் செயற்படுகின்றார்களோ அதற்கேற்ற தொழில்சார் கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதனால், ஏதாவதொரு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் கல்வித்துறை இப்பொழுது மாற்றியமைக்கப்பட்டுகின்றது' என்றார். 

இதற்கு கல்வியமைச்சர அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் இங்கு தெரிவித்தார். 

இதேவேளை, 'கல்வி அபிவிருத்தி தொடர்பாக நிதியொதுக்கீடு விடயத்தில் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் இடையே முரண்பாடுகள் நிலவுகின்றன. இதன் காரணமாக கல்விச் சமூகமே பாதிக்கப்படும். இது தொடர்பில் கல்வியமைச்சரி கவனமெடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையையும் அவர் இதன்போது முன்வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X