2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காதலனின் 7ஆம் நாள் கிரியைகளை அடுத்து காதலி சடலமாக மீட்பு

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன விபத்தொன்றில் உயிரிழந்த தனது காதலனின் 7ஆம் நாள் கிரியைகள் நிறைவடைந்த நிலையில், யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில், நேற்று (02) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்திலுள்ள தனியார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வந்த 18 வயதுடைய என்.கேஷானி எரங்கி என்ற யுவதியே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது அறைக்குள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி, தனது காதலனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளாரென சந்தேகிப்பதாக, யுவதியின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X