Freelancer / 2023 நவம்பர் 26 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - மதுரங்குளி ஜோசப் வத்தை பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலில் சிலைகள் மற்றும் திரிசூலம் உட்பட அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் என்பன திருடப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதி மக்களால் நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வந்த குறித்த காளி கோவிலில் இருந்த சுமார் இரண்டு அடி உயரமுள்ள இரண்டு சிலைகள் தரையில் வீசப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடரபில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.

50 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
9 hours ago