Editorial / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரொன்று, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பெயர்ப்பலகையுடன் மோதியதில், கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மதுபோதையில் இருந்த சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளாரென, ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வளைவில் நேற்று (27) மாலை 5 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில், திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களே, இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
வேகமாகப் பயணித்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதாகவும் அக்காரில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேரும் மதுபோதையில் இருந்ததாகவும், விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
அநுராதபுரத்திலிருந்து திருமண நிகழ்வுக்காக வாடகைக்குக் கொண்டு வரப்பட்ட அக்காரைச் செலுத்தியவர், இராணுவ வீரரெனவும் அதிக மதுபோதையில் இருந்தமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago