Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 12 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷார தென்னகோன்
பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கும் மேற்பட்டோர், பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென, பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே, மேற்படிக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தவிர, இணைத்தலைவர்களே பெரும்பாலும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர் என்றும், மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமன்கடுவ பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், தமன்கடுவ பிரதேச காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, இணைத் தலைவர்களான வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டார மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர் வளமூல முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோரே கலந்துகொண்டிருந்தனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது குறைகளை, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துக்கூற வேண்டிய அரசியல்வாதிகள், இவ்வாறு பொறுப்பற்ற தன்மையுடன் இருப்பது தொடர்பில் பிரதேச மக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago