Editorial / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர் தினமான இன்று (06) வௌ்ளிக்கிழமை வித்தியாலயமொன்றில் இடம்பெற்ற நிகழ்வின் போது கேக் சாப்பிட்டு முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 7ஆம் தர மாணவர்கள் ஒன்பது பேர் ஒவ்வாமை காரணமாக வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் வத்துப்பிட்டிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊராபொல மத்திய மகா வித்தியாலயத்துக்கு கேக் கொண்டு வரப்பட்டு ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டது.பின்னர் மாணவர்களும் கேக் சாப்பிட்டனர். பின்னர், மாணவர்கள் முகத்திலும், உடலிலும் கேக்கை பூசி மகிழ்ந்தனர்.
அப்போது ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேக்கை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது கேக்கை முகத்தில் தடவி வேடிக்கை பார்த்ததால் பாதிக்கப்பட்டனரா என்ற விவரம் வெளியாகவில்லை.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago