Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 14 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிலிருந்து, கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட, தடை செய்யப்பட்ட களை கொல்லியான க்ளைபோசெட் அடங்கிய 23 பொதிகளுடன், மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதாக, கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, இவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் கைப்பற்றிய 23 பொதிகளிலிருந்து ஒரு கிலோ கிராம், அரைக் கிலோ கிராம் மற்றும் அதற்கு கீழான நிறைகளையுடைய பக்கெட்டுக்கள் இருந்தனவெனவும் மொத்தமாக ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய க்ளைபோசெட் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட இந்த க்ளைபோசெட் களை கொல்லி, இந்நாட்டுக்குள் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக, கல்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் ரங்வல ஆராச்சி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன், கைப்பற்றப்பட்ட களைக் கொள்ளி பக்கட்டுக்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த கல்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .