2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் சந்தை நிகழ்வு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நூர் நகரில் இயங்கும் அல். ஹிரா முன்பள்ளியின் 12ஆவது ஆண்டு நிறைவும் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வும் அண்மையில் புத்தளம் சவீவபுரத்தில் அமைந்துள்ள விஷேட தேவையுடையவர்களுக்கான பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

முன்பள்ளியில்  கல்வி பயிலும் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த சிறுவர் சந்தையில் பங்கேற்றனர்.

பாடசாலை ஆசிரியைகளான பாத்திமா நிஸாயா மற்றும் பாத்திமா தஸ்பீஹா ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி, புத்தளம் நகர சபையின் முன்னாள்  தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கே.ஏ. பாயிஸ், புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக் உள்ளிட்ட பலரும் கலந்துசிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X