2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஜப்பான் பிரதிநிதி - புத்தளம் மக்கள் கலந்துரையாடல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

ஜப்பான் தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிக்கோ ஜமமோட்டோவுக்கும் புத்தளம் பிரதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு வடமேல் மாகாண முதலமைச்சரின் புத்தளம் மாவட்ட காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில், புத்தளம் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் கல்வி, தொழில், காணிப்பிரச்சினை மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பிலான பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலினையடுத்து ஜப்பான் தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிக்கோ ஜமமோட்டோ மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் உள்ளிட்ட குழுவினர் மணல்குன்று கிராமத்துக்கு கள விஜயத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது ஜப்பான் தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிக்கோ ஜமமோட்டோ, மணல்குன்று பிரதேச மக்களிடம் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளினை கேட்டறிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X