ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் புத்தளம் அல்காசிமி சிட்டி ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில், டெங்கு ஒழிப்புச் சிரமதானம், அண்மையில் நடைபெற்றது.
"பாடசாலையில் முற்றாக டெங்கை ஒழித்து, ஆரோக்கியமான சுகாதார வாழ்வுக்கு வித்திடுவோம்" என்ற கருப்பொருளில், பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் முஹம்மது நஜ்மி தலைமையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாடசாலை உள் மற்றும் வெளிப்புறச் சூழல், விளையாட்டு மைதானம், வீதியோரம், வடிகான்கள் என்பன சிரமதானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago