எம்.யூ.எம். சனூன் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், விக்டோரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் எஸ்.எச்.எம். மனாஸிர் (30 வயது) டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று (09) அதிகாலை புத்தளம் தள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர், டெங்குக் காய்ச்சல் காரணமாக, புத்தளம் தள வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளார்.
சிறந்த கிரிக்கெட் வீரரான இவர், விக்டோரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை நல்கி பல வெற்றிக்கிண்ணங்களை சுவீகரிக்க காரணகர்த்தாவாகத் திகழ்ந்துள்ளார்.
இவரின் ஜனாஸா, புத்தளம் வெட்டுக்குளம் மய்ய வாடியில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago