Princiya Dixci / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முஹம்மது முஸப்பிர்
நாத்தாண்டி, மாரவில பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (04) அதிகாலை 03 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளம் வர்த்தகரொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, ரிவோல்வருடன் கைதுசெய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
மாராவில, நாத்தாண்டி வீதியில் வசிக்கும் சுசந்த குருகுலசூரிய (வயது 39) என்ற வர்த்தகரே மார்புப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாவில பிரதேசத்தில் அமைந்துள்ள வரவேற்பு மண்டபமொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி முடிவடைந்து அங்கிருந்து வெளியேறிய இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போதே இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் இருந்த பழைய குரோதம் காரணமாக சந்தேகநபர், தன்னிடமிருந்த ரிவோல்வரால் வர்த்தகர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
எனினும், சம்பவம் இடம்பெற்ற குறுகிய நேரத்தினுள் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்த ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
மாராவில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.ஆர். பிரியந்த தலைமையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago