Princiya Dixci / 2016 ஜூன் 25 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்
துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் யானையின் உடல், இன்று சனிக்கிழமை (25) மகாவலி வனாந்தரப்பகுதியில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கண்டெடுக்கப்பட்டள்ளது.
குறித்த யானை, நேற்றிரவு வெள்ளிக்கிழமை (24) வேட்டையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த யானை, 45 வயதுடையது எனவும் 9 அடி உயரமானது எனவும் வெலிகந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சமிந்த குமார தெரிவித்தார்.
யானையின் உடலத்தில் பல பாகங்களிலும் துப்பாக்கிச் சண்ணங்களால் துளைக்கப்பட்ட காயங்கள் இருந்தாகவும் யானையின் உடலத்துக்கு அருகாமையில் குறித்த யானையை கொல்வதற்கெனப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago