2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் செயலமர்வு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் தும்புத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட செயலமர்வு, மதுரங்குளி மல்லம்பிட்டியில் அமைந்துள்ள ட்ரீம் ஹோலில் நேற்று வெள்ளிக்கிழமை (12) காலை நடைபெற்றது. 

வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருதோடை, நல்லாந்தழுவை, புழுதிவயல், கடையாமோட்டை மற்றும் கணமூலை உள்ளிட்ட பிரதேசங்களில் இயங்கும் தும்புத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

தும்பு உற்பத்தித் துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது அமைச்சருக்கு விளக்கப்பட்டது. தும்பு உற்பத்தியில் நவீன தொழில் நுட்பத்தை கையாழுதல், இத்துறையில் இடம்பெறும் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளுதல், உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார். 

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஏ. எஹியா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X