2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தாய்ப்பால் உட்கொண்ட சிசு மூச்சுத்திணறி பலி

Princiya Dixci   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சிலாபம், கரவிடாகார பிரதேசத்தில் தாய்ப்பால் ஊட்டிய வேளை மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒன்றரை மாதங்களேயான சிசுவொன்று, நேற்று வியாழக்கிழமை (16) மாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

செனாலி பாக்கியா எனும் பெண் சிசுவே இவ்வாறு பலியாகியுள்ளது.

நேற்று மாலை, தாய்ப்பால் ஊட்டிய வேளை தமது சிசுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் குறித்த சிசுவின் பெற்றோர், சிலாபம் வைத்தியசாலையில் சிசுவை அனுமதித்துள்ளனர். எனினும், அந்நேரம் சிசு உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X