எம்.யூ.எம். சனூன் / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தைச் சூழ ஒரு பகுதியை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்த தகரங்களில் சில, இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளனவென, புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக் தெரிவித்தார்.
புத்தளம் நகர சபையின் விளையாட்டு மைதானம், மாவட்ட விளையாட்டு அரங்காகப் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் சகல கால்பந்தாட்டப் போட்டிகளும், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்திலேயே நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சாஹிரா மைதானத்தைச் சூழ அமைக்கப்பட்டு வரும் சுற்றுமதில் பூர்த்தியாகாத பகுதியில், போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தருபவர்கள், நுழைவுச் சீட்டுக்களைப் பெறாமல் வெளியே நின்று போட்டிகளைப் பார்வையிடுவதைத் தடுக்கும் முகமாக, புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் இந்தத் தகரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
குறித்த தகரங்களே, இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளன. வெறுமனே 20 ரூபாயைச் செலுத்திப் போட்டிகளைக் கண்டுகளிக்கத் தயாராக இல்லாதவர்களே, இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என, எம்.எஸ்.எம். ரபீக், விசனம் தெரிவித்தார்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025