Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
சிலாபம்-குமாரகட்டுவ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, கொலைசெய்யப்பட்ட நிலையில், பெண்ணொருவர் நேற்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த, 63 வயதுடைய சோமாவதி என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொலைசெய்யப்பட்ட குறித்த பெண், வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பெண்ணின் மகள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதுடன், மகன் திருமணமாகி வேறு பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தனது தாய் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்பதை அறிந்த மகன், நேற்று (01) இரவு, தாய் வசித்து வந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது, கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், கூரை வழியாக உள்ளே நுழைந்து பார்த்தபோது, வீட்டின் அறையில் தாய் கொலை செய்யப்பட்டிருந்ததை அவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாருக்கு அவர் அறிவித்ததன் பின்னர், சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலம் குறித்த பிரேதப் பரிசோதனை இன்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago