Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
கொலைக்குற்றவாளிகளை பிணையில் விடுதலை செய்ய வேண்டாம் எனவும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறும் கோரி புத்தளம் மாவட்ட நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் கருவலகஸ்வௌ பகுதியில் கொலை செய்யப்பட்டவரது மனைவி, மகன் மற்றும் தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 11ஆம் திகதி கருவலகஸ்வௌ பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காட்டுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கருவலகஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் குமார (வயது 26) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் துப்பாக்கியின் உரிமையாளர் எனவும் மற்றையவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இப்படுகொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் வெளியில் நடமாடுவதாகவும் அவரையும் உடனடியாகக் கைது செய்யுமாறும் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் உரிமையாளருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பிணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் அதனை எதிர்த்தே கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளதாகவும் மரணமானவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இக்கொலையுடன் சம்பந்தபப்ட்ட இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது எனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் மூன்றாவது சந்தேக நபரை உடனடியாக கைது செய்து மூவருக்கும் உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago