2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி பாட்டனும், பேரனும் பலி

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் ஞாயிற்றுக்கிழமை (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த 60 மற்றும் 22 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தாவும், பேரனும் என்பது குறறிப்பிடதக்கது

உயிரிழந்த நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (02) குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை - இளந்தையடி சவுக்குத் தோட்டத்திற்கு சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த முதியவர் , அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரை பாதுகாப்பான முறையில் வெளியே அழைத்து வந்த முதியவர், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்ல தயாரான போதே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது .   இச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .