2025 நவம்பர் 05, புதன்கிழமை

பூச்சாடியில் கஞ்சா செடி: வீட்டு உரிமையாளருக்குப் பிணை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
 
புத்தளம், தளுவ நிர்மலாபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பூச்சாடியில் கஞ்சாச் செடி வளர்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11), ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த சந்தேகநபரின் வீட்டிலுள்ள பூச்சாடியில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்படுவதாப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் பூச்சாடியிலிருந்து கஞ்சாச் செடிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
 
எனினும், குறித்த பூச்சாடியில் கஞ்சா செடிகள் வளர்ந்து வருவது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனக் கைதுசெய்யப்பட்ட வீட்டு உரிமையாளர், பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (12) ஆஜர்படுத்திய போது, அவரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறும், சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X